‘4 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது’.. திடீரென வைரலாகும் ‘தல’ தோனி போட்டோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Oct 03, 2019 06:33 PM
இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது காலில் அடிப்பட்ட இலங்கை வீரர் ஜெயசூர்யாவுக்கு பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது உதவி செய்த விதத்தை தோனியுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2 -வது ஒருநாள் போட்டி கராச்சியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 305 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் பாபர் அசாம் 115 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்க இலங்கை அணி 46.5 ஓவர்களில் 238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் இப்போட்டியின் 34 -வது ஓவரின் போது பேட்டிங் செய்துகொண்டிருந்த இலங்கை வீரர் ஜெயசூர்யாவின் காலில் திடீரென அடிபட்டது. உடனே பாகிஸ்தான் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்ஃப்ராஸ் அகமது அவருக்கு முதலுதவி செய்தார்.
இதேபோல் கடந்த 2015 -ம் ஆண்டு தென் ஆப்பிர்க்காவுக்கு எதிரான போட்டியின் போது தென் ஆப்பிரிக்க வீரர் டு ப்ளிஸிஸ் -ன் காலில் அடிப்பட்டது. அப்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தோனி முதலுதவி செய்தார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க வீரர் டு ப்ளிஸிஸ்-க்கு முதலுதவி செய்த தோனியின் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் தற்போது சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Pakistan certainly stretched Sri Lanka today 😅#PAKvSL | #SpiritOfCricket pic.twitter.com/h69J5JvvxY
— ICC (@ICC) September 30, 2019
Like Teacher, Like Student #SpiritofCricket #PAKvSL pic.twitter.com/Rfi5ItgEFV
— Adam Dhoni (@AdamDhoni1) October 1, 2019
Copy 😄😄😄 pic.twitter.com/RBYlt6M4h9
— niranjan bonala (@niranjan_bonala) October 1, 2019
