'சாக்லேட் வச்சுருக்கேன், இங்க வா...' 'விளையாடிக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை...' பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் ராஜாங்கம் (28). இவர் அந்த பகுதியில் ஆஸ்பெட்டாஸ் ஓடு அமைக்கும் கம்பெனியில் பணி செய்து வருகிறார். இந்த நிலையில், ராஜாங்கத்தின் வீட்டு பக்கத்தில் ஒரு பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அந்த குழந்தையிடம் சாக்லேட் வாங்கி கொடுத்து ஏமாற்றி ராஜாங்கம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த குழந்தையின் பெற்றோர்கள் இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் உடனே வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜாங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
