'வேற' வழியில்ல... திடீரென 'கேப்டனை' மாற்றிய அணி... ஏன் இப்டி? 'ஷாக்கான' ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 27, 2020 01:57 PM

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் போட்டிகள் வருகின்ற மார்ச் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வருகின்ற வாரங்களில் அனைத்து அணியின் முன்னணி வீரர்களும் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2020: David Warner reinstated as Sunrisers Hyderabad Captain

இந்த நிலையில் அதிரடியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டனை மாற்றியுள்ளது. கடந்த 2018 முதல் கனே வில்லியம்சன் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். அவருடைய தலைமையில் கடந்த ஆண்டு ஹைதராபாத் அணி பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றது. ஆனால் இறுதிப்போட்டிக்கு முன்னேறவில்லை. கடந்த 2015 முதல் 2017 வரை டேவிட் வார்னர் தலைமையில் ஹைதராபாத் அணி விளையாடியது. இதில் 2016-ம் ஆண்டு அந்த அணி கோப்பையை வென்றது. இதற்கிடையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் டேவிட் வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

இதனால் 2018-ம் ஆண்டு அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை. கடந்தாண்டு மீண்டும் அணிக்கு திரும்பிய அவர் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிரடியாக ரன்களை குவித்தார். இந்த அறிவிப்பின் மூலம் வில்லியம்சன் ஹைதராபாத் அணிக்கு விளையாடும் வாய்ப்புகளும் குறைந்துள்ளன. ஒரு அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் தான் விளையாட வேண்டும். அதன்படி ஹைதராபாத் அணியில் ரஷீத் கான், முஹம்மது நபி, ஜானி பேர்ஸ்டோவ்,வார்னர், வில்லியம்சன் என 5 முக்கிய வீரர்கள் இடம்பெற்று உள்ளனர்.

நால்வருக்கு  மட்டும் தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் வில்லியம்சன் விளையாடும் வாய்ப்புகள் வெகுவாகக் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மறுபுறம் இந்தியாவுக்கு எதிராக சிறந்த கேப்டனாகவும், வீரராகவும் செயல்பட்டு வெற்றிகளைக் குவித்து வரும் வில்லியம்சனை விடுத்து, வார்னரை கேப்டனாக தேர்வு செய்தது ஏன்? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.