#VIDEO: 'விடமாட்றாங்க சார்...' 'உங்கள பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை சார் எனக்கு...' - கண்ணீர் விட்டு கதறி அழுத ரஜினி ரசிகை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளையொட்டி அவரின் ரசிகை ஒருவர் வீட்டின் முன் நின்று அழுத வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் 70- ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் ரசிகர்கள் கூட்டம் அவரின் போயஸ் கார்டன் இல்லத்தின் முன் குவிந்த வண்ணம் இருந்தனர். ரஜினிகாந்த் அவர்கள் வீட்டில் இல்லாததை அறியாத அவரின் ரசிகர்கள் அனைவரும் வெளியே வருமாறு கோரிக்கை விடுத்தும், தலைவர் வாழ்க என்று கோஷம் எழுப்பியும் வந்தனர்.
கூட்டத்தில் இருந்த பெண் ரசிகை ஒருவர் கண்ணீர் வழிய அழுதுக்கொண்டு , 'சூப்பர் ஸ்டார், உங்க ரசிகர்கள் வந்திருக்கோம், வாங்க சார்!' எனக் கூறி அழுது கொண்டிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
