ஐயோ... ஓடுங்க...ஓடுங்க...! 'டிராபிக்ல நின்னுட்டு இருந்தப்போ...' மரத்தில் இருந்து பைக்கில் விழுந்த சாரை பாம்பு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 16, 2020 06:46 PM

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக டிராபிக்கில் நின்றிருந்த இளைஞரின் புல்லட் பைக்கிற்குள் மரத்திலிருந்து பாம்பு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

The snake that fell from the tree on the bullet bike

புதுச்சேரி அருகேயுள்ள கரியமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் இன்று காலை தனது புல்லட் பைக்கில் புதுச்சேரிக்கு சென்றுள்ளார். புதுச்சேரி நகரில் உள்ள இந்திரா காந்தி சதுக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் விக்னேஷ் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது சாலையோரம் இருந்த மரத்திலிருந்து சாரைப் பாம்பு ஒன்று திடீரென்று கீழே விழுந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பார்க்காத விக்னேஷ் அதிர்ச்சியடைந்து தனது இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்துள்ளார். அவர் பாம்பு என அலறிக்கொண்டு ஓடுவதைக் கண்ட மக்கள் உடனே அங்கு வந்து பார்த்தனர்.

பாம்பு பைக்கிற்கு உள் இருப்பதை அறிந்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள், இருசக்கர வாகனத்தில் புகுந்திருந்த பாம்பை எடுக்க முயன்றனர். பின்னர் பைக் மெக்கானிக் உதவியுடன் பாம்பை வெளியே எடுத்தனர். பாம்பு எடுக்கப்பட்ட பின்னர் விக்னேஷ் புல்லட் பைக்கை எடுத்துக்கொண்டு சென்றார். வனத்துறையினர் பாம்பை வனப்பகுதியில் விடுவதற்கு கொண்டு சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : #SNAKE