'மனைவியும் என்ன விட்டு போயாச்சு...' 'இப்போ என் தனிமைய போக்குறது அபிராமி தான்...' - கர்ப்பிணி நாய்க்கு மாஸ்க் அணிந்து வளைகாப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சாவூரில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் தென்றல் நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது இரு மகள்களும் திருமணம் ஆகி அவர்கள் கணவர்களோடு வசித்து வருகின்றனர். தற்போது மனைவியை இழந்து வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
தனக்கு யாரும் துணைக்கு இல்லாத நிலையில் அவர் ஈரோப்பியன் டாபர்மேன் வகை நாயை வளர்த்து வருகிறார். அதற்கு அபிராமி என பெயரிட்டு அன்போடு வளர்த்து வருகிறார். அபிராமி தற்போது 50 நாள் கர்ப்பிணியாக இருக்கிறது.
அபிராமிக்கு மனிதர்களை போல் வளைகாப்பு செய்து பார்க்க ஆசைப்பட்ட அவர், மகள்களை அழைத்து நாய்க்கு பட்டாடை உடுத்தி நகைகள் அணிவித்தார். அங்குள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வந்து, பெண்கள் அபிராமி சந்தனம் குங்குமிட்டு அலங்கரித்தனர். கால்களில் வளையல் அணிவிக்கப்பட்டது.
நாய் தானே என விட்டுவிடாமல் அபிராமிக்கும் மாஸ்க் அணிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மற்ற செய்திகள்
