“நெனைச்சே பாக்கல!”.. ‘வாயால் கெடுபவர்களுக்கு மத்தியில்’.. ‘வாயை வைத்தே’ வைரலான இளம்பெண்!.. ‘அப்படி என்ன சாதிச்சார்?’

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Nov 11, 2020 12:37 PM

சமந்தா ராம்ஸ்டெல் என்கிற 30 வயது பெண், டிக்டாக்கில் பிரபலமானவர். அதுவும் இத்தனை அசாதாரண விஷயத்துக்கு என்றால், உலகின் மிகப்பெரிய வாய் உள்ள பெண் என்பதுதான் அவரது இந்த புகழுக்கு காரணம்.  இதற்காகவே டிக்டாக்கில் 7.5 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களை  ராம்ஸ்டெல்  கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Viral woman with world Biggest mouth has above 7point5 lakh followers

வாயால் கெடுவார்கள் சிலர். ஆனால் ராம்ஸ்டெல் தனது வாய் கொண்டு, தற்போதைய கின்னஸ் உலக சாதனை அளவான 3.75 அங்குலத்திற்கு மேல் கிட்டத்தட்ட நான்கு அங்குலங்கள் அளவு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அப்படி ஆன்லைனில் பகிர்ந்த வீடியோ ஒன்றில், ஒரு முழு சாண்ட்விட்சை தன் வாய்க்குள் வைப்பதை ராம்ஸ்டெல் செய்து காட்டுகிறார். இதேபோல் ஒரு முழு ஆப்பிளையும் தன் வாய்க்குள் வைத்து கடிக்கிறார். பின்னர்,  ஒரு டேப்பைப் பயன்படுத்தி  தனது வாயின் நீளத்தை அளவிட்டும் காட்டுகிறார். விற்பனை பிரதிநிதியாக இருந்துவரும் அமெரிக்காவின் கனெக்டிகட்டில் வசித்து வரும் ராம்ஸ்டெல் தனது திறமைகளை வெளிப்படுத்த ஒரு டிக்டாக் கணக்கை தொடங்கி, 3 மாதங்களில்,   8 லட்சம் ஃபாலோயர்களை நெருங்கினார். தற்போது 75 லட்சம் ஃபாலோயர்களுடன் இருக்கிறார்.

இதுபற்றி பேசிய, சமந்தா ராம்ஸ்டெல், “2019 இலையுதிர்காலத்தில் டிக்டாக்கை ஆரம்பித்தேன். ஆனால் ஏப்ரல் 2020 இல் கொரோனா பரவியதுவரை நான் பெரிதாக எதுவும் நடக்கும் என நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் ஊரடங்கால் நான் பிரபலமடையத் தொடங்கினேன், முக வீடியோக்கள், நகைச்சுவை ஸ்கிட்கள் மற்றும் பாடும் வீடியோக்கள் என விதவிதமான வீடியோக்களை உருவாக்கியதால் என்னுடைய வீடியோக்கள் வைரலாகின” என்றும் கூறினார்.  இப்போது தனது வீடியோக்களில் இருந்து நல்ல பணம் சம்பாதிக்கும், சமந்தா ராம்ஸ்டெல்லின், சில சிறந்த வீடியோக்களை 5 கோடிக்கும் அதிகமான முறை, பலரும் பார்த்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Viral woman with world Biggest mouth has above 7point5 lakh followers | World News.