‘6 மாவட்டங்களுக்கு’... ‘அதி தீவிர கனமழை எச்சரிக்கை’... ‘சென்னைவாசிகளுக்கு உதவி எண்கள் அறிவிப்பு’...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 01, 2019 06:49 PM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

extreme heavy rain alert in 6 districts and chennai helpline

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் குமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை என 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனிடையே, சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து, புகார் தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி அறிவித்திருக்கிறது. அதன்படி, 044-25384520, 25384530, 25384540 என்ற எண்களிலும் 9445477205 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags : #RAIN #WARNING #ALERT #IMD