‘தொடர்ந்து பெய்து வரும் கனமழை’... ‘இன்று எங்கெல்லாம்’... ‘பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை’... தேர்வுகள் ஒத்திவைப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 01, 2019 05:58 PM
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, 9 மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு (02.12.2019) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், நாகை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் பல்கலைக்கழகம் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங் மேன் பணிக்கான நேர்முகத் தேர்வு, வரும் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. இந்தத் தேர்வுகள் மழை காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும், மாற்று தேதிகள் பின்னர் அறிவிகப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதேபோல், புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு (02.12.2019) விடுமுறை என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
