'ரோட்டுல பள்ளம் இருக்கும்'...'இது என்னங்கடா 'குளம்' இருக்கு'...வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Dec 02, 2019 12:26 PM
சாதாரணமாக சாலைகளில் மேடு பள்ளங்கள் இருக்கும். அதுவும் மழை காலம் என்றால் பள்ளங்கள் அதிகமாக காணப்படும். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள். அதிலும் பெரிதும் பாதிக்கப்படுவது இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தான்.
மழை நீர் அதிகமாக தேங்கி நிற்கும் காரணத்தினால் சாலையில் இருக்கும் பள்ளம் தெரியாமல் பல பேர் விபத்தில் சிக்குவது உண்டு. இந்நிலையில் சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், சாலையில் இருக்கும் பள்ளத்தில் மழை நீர் தேங்கி நிற்கிறது. அதிலிருந்து இரு சக்கர வாகனம் ஒன்று வெளியே எடுக்கப்படுவது பலரை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
வீடியோ தொடங்கும் போது எதோ பர்சு போன்ற சிறிய பொருள் அந்த குழிக்குள் விழுந்து விட்டது போல, என நினைத்து வீடியோவை பார்க்க தொடங்கினால் இறுதியில் நமக்கு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. நான்கு பேர் சேர்ந்து சாலையின் மையப்பகுதியில் இருக்கும் பெரிய குழியில் இருந்து இருசக்கர வாகனத்தை வெளியில் எடுக்கிறார்கள். இதனால் அந்த பைக்கில் சென்ற நபருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படாத என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை. அந்த வீடியோ வட இந்தியாவில் எடுக்கப்பட்டது என தெரிகிறது.
இதனிடையே இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இரவில் வருவோர் எவ்வளவு சிரமத்தை எதிர்கொள்வார்கள் என, பலரும் தங்களின் ஆதங்கத்தை பதிவு செய்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.