தமிழகத்தில் 3 புதிய மாவட்டங்கள்..! சட்டப்பேரவையில் இன்று அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jul 18, 2019 12:50 PM

தமிழகத்தில் மூன்று புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2 new district TN CM announcement in assembly

கடந்த ஜனவரி மாதம் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் தமிழகத்தின் மாவட்டங்களின் எண்ணிக்கை மொத்தம் 33 -ஆக உயர்ந்தது.

இந்நிலையில் 110 விதியின் கீழ், நெல்லையை பிரித்து தென்காசி புதிய மாவட்டமாகவும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாகவும் மாற்றப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35 -ஆக உயர உள்ளது. இம்மாவட்டங்களுக்காக இரண்டு தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கும்பகோணம் தனி மாவட்டமாக விரைவில் மாற்றப்பட உள்ளதாக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

Tags : #EDAPPADIKPALANISWAMI #TN #DISTRICT #TENKASI #CHENGALPATTU #KUMBAKONAM