'அவர் சரி இல்ல மேடம், என் பொண்ண...' 'போலீஸ் ஸ்டேஷன்ல விசாரணை முடிஞ்ச அடுத்த செகண்டே...' - ஈரக்குலையை நடுங்க செய்யும் கொடூரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தென்காசி மாவட்டத்தில் காவல் நிலையம் அருகிலேயே பெண் ஒருவர் தன் கணவரால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Tenkasi man stabbed his wife in police station abuse case Tenkasi man stabbed his wife in police station abuse case](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/tenkasi-man-stabbed-his-wife-in-police-station-abuse-case.jpg)
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பழக்கடை நடத்தி வருபவர் 46 வயதான முருகன். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் முருகனுக்கும், விருதுநகர் மாவட்டம் திரிச்சுழி பகுதியை சேர்ந்த 35 வயதான சித்ரா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் 9 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே சித்ராவும் முருகனுடன் ஒரே வீட்டில் தங்க ஆரம்பித்துள்ளார். மேலும் சித்ராவிற்கு இதற்கு முன்பே 2 திருமணம் ஆகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சித்ராவின் 2-வது கணவருக்கு பிறந்த ஒரு மகளையும், மகனையும் முருகன் வீட்டிலேயே வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் சித்ரா தன் கணவர் முருகன், தன் மகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
விசாரணைக்காக காவல் நிலையம் வந்த முருகனும், சித்ராவும் விசாரணை முடிந்து வெளியே சென்றவுடன், முருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தி மூலம் சித்ராவின் தலை மற்றும் உடலில் தாக்கியுள்ளார்.
காவல் நிலையம் அருகிலேயே நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அங்கிருந்த சிலர் முருகனை பிடிக்க முயன்ற போது மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பித்து ஓடியுள்ளார்.
அதையடுத்து சித்ராவை ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆம்புலன்சிலேயே சித்ரா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் தப்பி ஓடிய முருகனை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)