‘பணம் அனுப்பியதை நிறுத்திய சகோதரர்கள்!’.. குழந்தைகள், வளர்ப்பு நாய்களுடன் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு.. இடிந்து போன, தாய் செய்த உடனடி காரியம்.. முறையற்ற உறவால் சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Aug 26, 2020 01:51 PM

தமிழகத்தில் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு வளர்ப்பு நாய்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு இளம் பெண் ஒருவர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

after killing children, pet dogs young mom and her mother suicide

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியை சேர்ந்த சகாதேவன் என்பவரின் குடியிருப்பில் 50 வயதான சாந்தி என்கிற நபர் வாடகைக்கு தங்கி வசித்து வந்துள்ளார். சாந்தியின் கணவர் இறந்து விட்ட நிலையில் அவருக்கு துளசிதேவி என்ற 23 வயது மகள் இருந்துள்ளார். துளசி தேவிக்கும் திருமணம் ஆகி 2 வயதில் ஒரு குழந்தையும் 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர். சாந்தி இரண்டு நாய்களை வளர்த்து வந்துள்ளார். வீட்டில் எப்போதும் குழந்தைகளின் அழும் சத்தமும் நாய் குரைக்கும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.

நேற்றுமுன்தினம் எந்த சத்தமும் வீட்டிற்குள் இருந்து வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டு உரிமையாளருக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையில் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சாந்தி தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த போலீசார் துளசிதேவி மற்றும் இரண்டு குழந்தைகள்,  வளர்ப்பு நாய்கள் இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர்.  அதன் பின் போலீஸார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் துளசி தேவி சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டவர் என்பதும் கணவரைப் பிரிந்த துளசிதேவி துணிக்கடை ஒன்றில் வேலைபார்த்து வந்ததுடன் தனது தாய் சாந்தியுடன் வசித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

இதனிடையே துளசி தேவிக்கு சில இளைஞர்களுடன் முறையற்ற உறவு இருந்ததால் இருந்ததாகவும், அதற்கு சாந்தி துணை போனதாகவும் வெளிநாட்டில் உள்ள துளசிதேவியின் சகோதரர்களுக்கு தெரியவந்ததை அடுத்து அவர்கள் வழக்கமாக அனுப்பி வந்த பண உதவியை நிறுத்தியதாக தெரிகிறது.  இந்த நிலையில் ஊரடங்கால் வேலைக்கு போகாமல் இருந்த துளசி தேவி வறுமையின் காரணமாக குழந்தைகள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு விஷம் கொடுத்து, தானும் தற்கொலை செய்து கொண்டதும், மகளிம் இறப்பால் மனமுடைந்த தாய் சாந்தி தற்கொலை செய்துகொண்டதும் தெரிய வந்துள்ளது.  துளசிதேவி இறந்த பின்னர் அவரது சடலத்தை கீழே இறக்கி வைத்து விட்டு, பின்னர் அதே கயிற்றில் சாந்தி தூக்கிட்டுகொண்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்ததுடன், இதுகுறித்து விசாரித்தும் வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. After killing children, pet dogs young mom and her mother suicide | Tamil Nadu News.