'ஏன்?.. 'இத' சமைச்சு வச்சா சாப்பிட மாட்டியா'!?.. பாத்ரூமுக்கு சென்ற மனைவி... அடுத்து செய்த பகீர் 'சம்பவம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉருளைக்கிழங்கு குழம்பு சாப்பிட மறுத்ததால், தனது கணவனை மனைவி ஒருவர் ரவுண்டு கட்டி வெளுத்துள்ளார்.
![ahmedabad woman thrashes diabetic husband for denying potato curry ahmedabad woman thrashes diabetic husband for denying potato curry](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/ahmedabad-woman-thrashes-diabetic-husband-for-denying-potato-curry.jpg)
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள வஸ்னாவில் வசிக்கும் தம்பதி ஹர்ஷத் கோயல்-தாரா. 40 வயதான ஹர்ஷதுக்கு நீரிழிவு நோய் இருப்பதால், அவரை உருளைக்கிழங்கு உண்ண வேண்டாம் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று, தன் மனைவியிடம் இரவு உணவுக்கு என்ன சமையல் என்று கேட்டுள்ளார், ஹர்ஷத் கோயல். அதற்கு பதிலளித்த மனைவி தாரா, சப்பாத்தியும் உருளைக்கிழங்கு குழம்பும் சமைத்திருப்பதாக கூறியுள்ளார்.
அப்போது, தன்னை மருத்துவர் உருளைக்கிழங்கு உண்ணக்கூடாது என்று அறிவுறுத்தியிருப்பதாக தாராவிடம் ஹர்ஷத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றவே, குளியலறைக்குச் சென்ற தாரா வாஷிங் பேட்டை எடுத்து வந்து, கணவர் ஹர்ஷத்தை சரமாரியாக அடித்து நொறுக்கியுள்ளார்.
இதனையடுத்து, ஹர்ஷத் அவரது மனைவி தாரா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கைப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)