'உப்பில் ஆரம்பித்த தகராறால்'... 'ஆத்திரம் தலைக்கேறிய கணவர் செய்த நடுங்கச்செய்யும் காரியம்'... 'நடுரோட்டில் நேர்ந்த கொடூரம்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையில் சாப்பாட்டில் உப்பு குறைவாக இருந்ததால் ஏற்பட்ட தகராறில் மனைவியை ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை ஜேஜே பாலம் அருகே சாலை ஓரத்தில் வாழ்ந்து வந்த தம்பதி அப்துல் ரஹ்மான் - நஸ்ரத் அலியாஸ். இவர்கள் கூலி வேலை செய்துவந்த நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல நேற்றிரவும் சாப்பாட்டில் உப்பு குறைவாக இருப்பதாக கூறி அப்துல் ரகுமான் தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
ஒருகட்டத்தில் தகராறு பெரிதாகி இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் தலைக்கேறிய அப்துல் தனது மனைவியை சாலையில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், சாலையில் இருந்த கல்லால் ஆன டிவைடரில் மனைவியின் தலையை இடித்துள்ளார். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நஸ்ரத் அலியாஸை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அப்துலை கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
