'எல்லாத்தையும் மறந்துட்டு முதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணலாம்'... 'சமாதானம் பேச போன மனைவி'... மொத்த குடும்பத்தையும் நிர்க்கதியாக்கிய கொடூரம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கணவன் அழைத்தார் என்பதற்காக ஆசையாகப் பேசச் சென்ற மனைவிக்கு நடந்த கொடூரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனின் ஒரு நிமிட கோபம் மொத்த குடும்பத்தையும் நிர்க்கதியாக்கியுள்ளது.

சவுதியின் தெற்கு செட்டாவைச் சேர்ந்தவர் முனிரா. 29 வயதான இவர் தனது மனைவியுடன் அவ்வப்போது சண்டை போட்டு வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மனைவியையும், குழந்தையையும் பிரிந்து சென்று விட்டார். 2 மாதங்கள் தனிமையிலிருந்த அவர் மனைவியுடன் சேர விருப்பப்பட்டுள்ளார். இதையடுத்து முனிரா தனது விருப்பத்தை மனைவியிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்து கணவனைச் சந்திக்க வந்துள்ளார். இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஒருவரை ஒருவர் குற்றம் சட்டியுள்ளார்கள். இது தொடர்ந்து கொண்டே செல்ல, ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற கணவன் முனிரா, மனைவியைச் சுவரோடு வைத்து மோதியுள்ளார். இதில் முனிராவின் மனைவி படுகாயம் அடைந்துள்ளார். அப்போதும் கோபம் அடங்காத கணவர் தன்னுடைய சுத்தியலால் மனைவியின் தலையில் தாக்கி அடித்தே கொலை செய்துள்ளார். தனது ஆத்திரம் தீர மனைவியைக் கடுமையாகத் தாக்கிய முனிரா, தனது தாய்க்கு நடந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு ரத்த கறைகளுடன் நின்று கொண்டிருந்த முனிராவை கைது செய்தனர். மேலும் அவர் கொலைக்குப் பயன்படுத்திய சுத்தியலையும் கைப்பற்றினார்கள். சமாதானம் பேசச் சென்ற தங்களது பெண்ணை அநியாயமாகக் கொன்று விட்டானே எனப் பெண்ணின் பெற்றோர் கதறி அழுதார்கள். தாய் இறந்து விட, தந்தை கொலைகாரனாக மாறிய நிலையில் அந்த குழந்தை தற்போது பெற்றோர் இன்றி அனாதையாக மாறியுள்ளது.
ஒரு நிமிட கோபம், ஒரு உயிரைப் பறித்ததோடு ஒட்டு மொத்த குடும்பத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது.

மற்ற செய்திகள்
