'நாங்க வேணும்ன்னு கொலை பண்ணல'... 'அவர் என்ன செஞ்சாரு தெரியுமா'?... அதிரவைத்த 'திருநங்கைகளின்' வாக்குமூலம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்த தொழிலாளியை 3 திருநங்கைகள் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமநகர் (மாவட்டம்) டவுனை சேர்ந்தவர் ராஜேந்திரா. இவர் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் ராமநகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ராஜேந்திராவை 3 திருநங்கைகள் மயங்கிய நிலையில் அழைத்து வந்துள்ளார்கள். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த நபர் யார், அவரை உங்களுக்கு எப்படித் தெரியும் எனப் பல கேள்விகளை மருத்துவர்கள் கேட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் 3 பேரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்கள். இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர் உடனடியாக ராமநகர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர், 3 திருநங்கைகளிடமும் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது நாங்கள் 3 பேரும் தான் ராஜேந்திராவை கொலை செய்தோம் என ஒப்புக்கொண்டார்கள். மேலும் அவர்கள் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த ராஜேந்திரா, மாலையில் வேலை முடிந்ததும் திருநங்கை போல வேடம் அணிந்து பெங்களூரு நைஸ் ரோட்டில் நின்று வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் பெற்று வந்து உள்ளார். இதனைக் கவனித்து வந்த 3 திருநங்கைகளும் அவரும் திருநங்கை தானே என ஒன்றும் கூறாமல் இருந்துள்ளார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல 3 பேரின் வருமானமும் குறையத் தொடங்கியுள்ளது. இதையடுத்து ராஜேந்திராவின் நடவடிக்கைகளைக் கவனித்தபோது தான் அவர் திருநங்கை இல்லை என்பது 3 பேருக்கும் தெரிய வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து நைஸ் ரோட்டில் நின்று கொண்டு இருந்த ராஜேந்திராவிடம் இதுபற்றி தேவி, பாவனா, நித்யா ஆகிய 3 திருநங்கைகளும் எங்களது பிழைப்பில் என் மண்ணை அள்ளி போடுகிறாய் எனக் கேட்டு உள்ளனர். அப்போது ராஜேந்திராவுக்கும், 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் 3 பேரும் சேர்ந்து ராஜேந்திராவை பிடித்து சரமாரியாக அடித்து உள்ளனர். இதில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ராமநகர் ஆஸ்பத்திரிக்கு 3 பேரும் கொண்டு வந்து உள்ளனர். மருத்துவமனைக்கு வந்த பிறகு தான் அவர் இறந்தது எங்களுக்குத் தெரிய வந்தது. எங்களுக்கு வேறு தொழில் இல்லை, அவரும் எங்களுக்குப் போட்டியாக வந்தது தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்'' என தங்களது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்கள்.
திருநங்கை வேடமிட்டு பணம் பார்க்க நினைத்த நபர் திருநங்கைகளால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெங்களூரு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.