'9 மாதமாக தாய் வீட்டிலிருந்த மனைவி'... 'கர்ப்பமானதால் அதிர்ந்துபோன கணவர்'... 'இளம்பெண்ணுக்கு நேர்ந்த கலங்கவைக்கும் சம்பவம்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகாரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பமடைந்த மனைவியை ஏற்றுக்கொள்ள முடியாது என கணவர் கூறியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்துவிட்ட நிலையில் தாய்வழி தாத்தா வீட்டில் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை புர்னே மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு அவருடைய தாத்தா திருமணம் செய்துகொடுத்துள்ளார். இதையடுத்து கடந்த 9 மாதங்களாக அந்தப் பெண் தாத்தா வீட்டில் இருந்துவந்த நிலையில், அங்கு சென்ற சில நாட்களிலிருந்தே அந்தப் பெண்ணை அவருடைய தாய்மாமா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்துள்ளார். இதுபற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டிவந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்தப் பெண் கர்ப்பமடைந்ததால் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க, தாத்தாவும் அந்தப் பெண்ணை வீட்டைவிட்டு துரத்த முயன்றுள்ளார். இதுகுறித்து அறிந்து அதிர்ந்துபோன அந்தப் பெண்ணின் கணவர், சிறுவயதில் இருந்தே இதுபோல நடந்து வந்திருக்கலாம் எனக் கூறி அவரை ஏற்க மறுத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்தப் பெண்ணின் தாய்மாமாவை கைது செய்துள்ள நிலையில், கர்ப்பிணியாக உள்ள அந்தப் பெண் தற்போது கணவர் ஏற்காததால் வேறு வழியின்றி தாத்தா வீட்டிலேயே தங்கியுள்ளார்.

மற்ற செய்திகள்
