'எம் மகள் இதனாலதான் இப்படி பண்ணிட்டா'.. 'பள்ளி மாணவியின்' விபரீத முடிவு.. தாய் சொல்லும் காரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Aug 23, 2019 12:27 PM

விருப்பமில்லாமல், கட்டாயப்படுத்தி திருமண ஏற்பாடு செய்ததை அடுத்து, 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் எடுத்த விபரீத முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

school girl commits suicide after family forced for marriage

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சிறுமங்கலம் பகுதியில் வசித்துவரும் பெரியம்மாள் என்பவரின் மகள் சரண்யா. 5 ஆண்டுகளுக்கு முன்னதாக, தந்தையை இழந்த நிலையில், பெருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துவருகிறார் சரண்யா.

இவர் நேற்று மாலை வீடு திரும்பியதும், வயல் வெளிக்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறி, மருத்துவர்கள் அந்த பெண்ணின் பிரேதத்தை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

தவிர, போலீஸாரிடம் புகார் அளித்த , சரண்யாவின் தாய், தன் மகள் வயிற்று வலி தாளாமல் இவ்வாறு செய்துவிட்டதாக கூறியுள்ளார். ஆனால் உண்மையில் சரண்யாவின் தந்தை இல்லாததாலும், சரண்யாவின் அண்ணன் வெளிநாடு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

இதனால் சரண்யாவுக்கு அவசரமாக திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததாலும், அந்த திருமணத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தாலேயே சரண்யா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்ப்பட்டதை அடுத்து, போலீஸார் சந்தேகப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

Tags : #SCHOOLSTUDENT #MARRIAGE #GIRL