'என்னோட மனைவி நிறைமாத கர்ப்பிணி' ... 'இருந்தாலும் உங்களுக்காக தான் இங்க' ... கடலூர் போலீசாரின் விழிப்புணர்வு வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த வீடியோ ஒன்றை கடலூர் மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தியும் மக்கள் பலர் எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் பொதுவெளிகளில் சுற்றி வருகின்றனர். பணியில் இருக்கும் போலீசார் தேவையில்லாமல் சுற்றித் திரியும் நபர்களுக்கு பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கியும் மக்கள் நடமாடி வருவது குறைந்தபாடில்லை.
இந்நிலையில், பொதுமக்கள் கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக கடலூர் போலீசார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் போலீசார்கள் தங்களது குடும்ப சூழ்நிலை குறித்து விளக்குகின்றனர். மக்களாகிய நீங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்தால் தான் நாங்கள் எங்களது குடும்பத்தாருடன் நேரத்தை கழிக்க முடியும். அதுவரை சாலைகளில் நின்று எங்களது பணிகளை தொடர வேண்டும். நீங்கள் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது எங்களுக்கு உதவி செய்யும் என தங்களது நிலைகளை விளக்குகின்றனர்.
தங்களது தற்போதைய சூழ்நிலை மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறித்து கடலூர் போலீசார் வெளியிட்டுள்ள இந்த வீடியோஇணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
உங்களுக்காக நாங்கள் வெளியே!
நாட்டுக்காக நீங்கள் வீட்டுக்குள்ளே!#StaySafe https://t.co/WTtpS0nEyj
— Arjun Saravanan (@ArjunSaravanan5) April 1, 2020