‘கணுக்கால் முறிவு’!.. ‘இன்னும் 240 கிமீ இருக்கு’.. ‘எனக்கு வேற வழி தெரியல’.. ஊரடங்கால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 31, 2020 10:37 PM

ஊரடங்கு உத்தரவால் கால் முறிவுடன் இளைஞர் ஒருவர் 24 கிலோமீட்டர் நடந்தே ஊருக்கு செல்ல முடிவெடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Migrant worker walk home with fracture leg photo goes viral

ராஜஸ்தானை சேர்ந்த பன்வர்லால் என்ற இளைஞர் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிபாரியா நகரில் தினக்கூலியாக பணியாற்றி வந்துள்ளார். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் பன்வர்லாலின் கால் விரல்கள் மற்றும் கணுக்காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக கணுக்காலில் மாவுக்கட்டு போட்டு பன்வரலால் ஓய்வு எடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலை இழந்த அவர் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். ஆனால் மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து வசதிகள் இல்லை. அதனால் நடந்தே ஊருக்கு செல்வது என முடிவெடுத்துள்ளார்.

இதுகுறித்து NDTV ஊடகத்திடம் பேசிய பன்வர்லால், ‘நான் வேலை பார்த்த இடத்தில் இருந்து 500 கிலோ மீட்டர் தூரம் வரை ஒரு வாகனத்தில் வந்தேன். சொந்த ஊருக்கு செல்ல மீதமுள்ள 240 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல முடிவெடுத்துள்ளேன். பாதுகாப்பு காரணங்களுக்காக மாநில எல்லையில் போலீசார் என்னை தடுத்து நிறுத்துவார்கள் என எனக்கு தெரியும். ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் குடும்பத்தினர் அங்கு தனியாக இருக்கிறார்கள். எனக்கு வேலையும் இல்லை. அதனால் அவர்களுக்கு பணமும் அனுப்ப முடியாது. வேறுவழியில்லாமல் என் காலில் உள்ள மாவுக்கட்டை அவிழ்த்துவிட்டு நடக்க தொடங்கியுள்ளேன்’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Tags : #CORONA #CORONAVIRUS #MIGRANTWORKER #LOCKDOWN #WALK