‘லாக்டவுன்லாம் முடிஞ்சுது.. லீவுக்கும் சேத்து க்ளாஸ்!.. ஸ்கூலுக்கு கெளம்புங்க!’.. தெறிக்கவிட்ட பெற்றோர்... குழந்தைகளின் ‘வைரல்’ ரியாக்‌ஷன்ஸ்!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Apr 01, 2020 09:55 PM

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக லாக்டவுன் எனப்படும் ஊரடங்கினையும் சமூக விலகலையும் கடைபிடித்து வருகின்றனர். 

go back to school, parents prank their kids and their reaction

இந்த லாக்டவுன் காலம் முடியும் வரை பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் உலக நாடுகளில் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இங்கிலாந்து, அயர்லாந்து போன்ற இடங்களில் குழந்தைகளிடம் லாக்டவுன் காலம் முடிந்துவிட்டதாகக் கூறி பள்ளிக்குப் போகச் சொல்லி பெற்றோர்கள் பொய்கூறி விளையாண்டுள்ள சம்பவங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. 

தனது பெற்றோர் பள்ளிக்குத் திரும்பச் சொன்னதற்கு ஒரு அயர்லாந்து சிறுவன் அடம்பிடித்து பண்ணிய அலப்பறை, பெற்றோர் சொன்னதும் பள்ளிக்கு திரும்ப போகும் ஆசையில் சிறுமி ஒருவர் காரில் ஏறி உட்கார்ந்ததும், இன்னொரு சிறுமி பள்ளிக்கு அருகில் வரை நெருங்கி சென்றுவிடுகிறார்.

பிறகு அவரது தந்தை உண்மையைச்சொல்லி திரும்ப அழைக்கிறார். அதுமட்டுமல்லாமல் சில பெற்றோர்கள் லாக்டவுனில் தவறிப்போன வகுப்புகளும் சேர்த்து வைக்கப்படும் என்பதால் வார இறுதியில் கூட விடுமுறை கிடையாது என்று சொல்லி, குழந்தைகளை ஏமாற்றியுள்ளனர். இதெல்லாம் ஏப்ரல் 1-ஆம் தேதியான இன்றைய முட்டாளாக்கும் தினத்தையொட்டி இந்த பெற்றோர்கள் செய்துள்ளனர். 

 

Tags : #SCHOOLSTUDENT #LOCKDOWN #PARENTS #PRANK