'திரும்பி வந்துட்டேனு சொல்லு'.. 'இந்த முறை மஞ்சள் இல்ல.. பிங்க்'.. கலக்கும் தேர்தல் அதிகாரி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 22, 2019 03:26 PM

உத்தரப் பிரதேசத்தில் கடந்த மேமாதம் நடந்த லோக்சபா தேர்தலில், 5வது கட்ட வாக்குப்பதிவின் போது லக்னோவில் அமைந்திருந்த வாக்குச் சாவடிக்கு மஞ்சள் நிறத்தில் மாடர்னாக புடவை அணிந்துகொண்டு ஸ்டைலாகவும், கையில் தேர்தல் குறிப்புகள் அடங்கிய பெட்டி ஒன்றுடனும் வந்த வழக்கத்துக்கு மாறான தேர்தல் பணி ஊழியர் ரீனா திவேதி.

Yellow Saree fame Election officer Reena Dwivedi is back

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பொதுப்பணித்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் 35 வயதான ரீனா திவேதி இம்முறை பிங்க் நிற புடவை அணிந்துகொண்டு லக்னோவில் உள்ள கிருஷ்ணாநகர் இடைத்தேர்தல் நடக்கும் வாக்குச் சாவடிக்கு வந்து கலக்கியுள்ளார். அரசு அதிகாரிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற டெம்பிளேட்டை உடைத்து இப்படி தோன்றுவதால் தான் நேர்மறையாகவும் எனர்ஜியுடனும் உணருவதாக ரீனா கூறியுள்ளார்.

மேலும் கணவரை இழந்த ரீனா திவேதி, தனது 15 வயது மகன் பெரும் அரசு அதிகாரியாவதற்கான கனவுகளுடன் படித்து வருவதாகவும், அவனுக்கு உதவும் வகையில் வாழ்ந்து அவனது கனவை நிறைவேற்றுவதுதான் ஒரு அம்மாவாக தனது கடமை என்றும் பொறுப்புடன் பேசியுள்ளார்.

Tags : #ELECTIONS #ELECTIONCOMMISSION #REENADWIVEDI