"யப்பா சாமி".. விராட் கோலி எடுத்த மிரட்டல் 'கேட்ச்'.. போட்டியையே மாத்துன அந்த ஒரு தருணம்!!.. 'GOOSEBUMPS' வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி 20 உலக கோப்பைத் தொடருக்கான பயிற்சி போட்டியில் விராட் கோலி எடுத்த கேட்ச் தொடர்பான வீடியோ, பலரையும் மிரண்டு பார்க்க வைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் வைத்து தற்போது டி 20 உலக கோப்பைத் தொடர் ஆரம்பமாகி உள்ளது.
இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாகவும் தயாராகி வருகின்றனர். ஒரு பக்கம், தகுதி சுற்று ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் பயிற்சி போட்டியிலும் விளையாடி வருகின்றன.
இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் மோதி இருந்தன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல் 33 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் எடுத்திருந்தார். அதே போல, மிடில் ஆர்டரில் அதிரடி காட்டிய சூர்யகுமார், 50 ரன்கள் எடுத்திருந்தார்.
தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. இதனால், பயிற்சி ஆட்டம் என்ற போதிலும் விறுவிறுப்பு உருவானது. இதனிடையே கடைசி இரண்டு ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்ஷல் படேல் வீசிய 19 ஆவதுஓவரின் முதல் பந்தில் 79 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்த பின்ச் அவுட்டானார்.
அதற்கு அடுத்த பந்தில், டிம் டேவிட்டை அற்புதமாக கோலி ரன் அவுட் செய்திருந்தார். தொடர்ந்து, அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தது. இதனால், கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. பயிற்சி ஆட்டம் என்பதால், அணியில் இல்லாத முகமது ஷமி அந்த ஓவரை வீச வந்தார்.
முதல் இரண்டு பந்துகளில் 4 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி 4 பந்துகளில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட கம்மின்ஸ், அதனை சிக்ஸர் லைனுக்கு அருகே அடித்தார். ஆனால், அங்கே நின்ற கோலி, ஒற்றைக் கையில் துள்ளிய படி கேட்சை எடுத்தார்.
ஒருவேளை அது சிக்ஸர் அல்லது பவுண்டரியாக மாறி இருந்தால் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பும் குறைந்திருக்கும். அற்புதமான கேட்சை எடுத்து போட்டியின் முடிவை கோலி மாற்றி இருந்ததையடுத்து, அடுத்த மூன்று பந்துகளிலும் விக்கெட்டுகளை இழந்ததுஆஸ்திரேலியா அணி. இதனால், இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றியையும் பெற்றது.
விராட் கோலி கேட்ச் எடுத்த வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
VIRAT KOHLI STOP IT!! Takes catch of the tournament.. in a warm up 😂🔥 #T20WorldCup pic.twitter.com/KosXyZw8lm
— Liam Clarke (@Clarkeyy23) October 17, 2022