திருநங்கையுடன் 'காதல்'!!.. ஓகே சொன்ன 'மனைவி'.. இரண்டாவது திருமணம் செய்த வாலிபர்!!.. வைரலாகும் ஃபோட்டோஸ்!!
முகப்பு > செய்திகள் > இந்தியா32 வயதான நபர் ஒருவர், தனது மனைவி முன்னிலையில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

ஒடிசா மாநிலத்தின் கலஹந்தி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றை சேர்ந்தவர் பஹீர் நியால். இவருக்கு 32 வயதாகும் நிலையில், கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்துள்ளது.
தொடர்ந்து, தனது மனைவி மற்றும் மகளுடன் அதே கிராமத்தில் வாழ்ந்து வந்தார் பஹீர் நியால். அப்படி இருக்கையில், கடந்த ஒரு வருடத்துக்கும் முன்பாக சங்கீதா என்ற திருநங்கையுடன் பஹீருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பஹீர் மற்றும் சங்கீதா இடையேயான பழக்கம் நாளடைவில் காதலாகவும் மாறி உள்ளது. தனது மனைவிக்கு தெரியாமல், கடந்த ஒரு வருடமாக சங்கீதாவுடன் பஹீர் வெளியே சுற்றி காதலை வளர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, கணவரின் காதல் விவகாரம், பஹீர் மனைவிக்கு தெரிய வந்துள்ளது.
ஆரம்பத்தில் இதனைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த மனைவி, அதன் பின்னர் அவர்களின் உறவில் உள்ள உணர்வை புரிந்து கொண்டு கணவருக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்துள்ளார். இதன் பின்னர், அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் திருநங்கைகள் முன்னிலையில் பஹீர் மற்றும் சங்கீதா ஆகியோரின் திருமண ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, மனைவியின் முன்னிலையில், திருநங்கை சங்கீதாவை இரண்டாவதாகவும் திருமணம் செய்து கொண்டார் பஹீர்.
இவர்களின் திருமணத்திற்கு வந்திருந்த திருநங்கைகள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இது பற்றி பேசும் சங்கீதா, பஹீரின் குடும்பத்தில் அவரது மனைவி உள்ளிட்ட அனைவரும் தன்னை அன்போடு அரவணைத்து கொண்டதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் தான் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், திருமணத்திற்கு பின்னர், தனது இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் இணைந்து வாழ பஹீர் முடிவு எடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மற்ற செய்திகள்
