Naane Varuven M Logo Top

"மினிஸ்டர் வேண்டப்பட்டவரு தான்".. பலமுறை திருமணம்.. எக்கச்சக்க ரீல் அளந்த பெண்.. புது மாப்பிள்ளையா மாற போனவர் வெச்ச ட்விஸ்ட்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Sep 21, 2022 04:29 PM

கரூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மீது பல்வேறு மோசடி புகார்கள் எழுந்த நிலையில், அவரிடம் விசாரித்த போது வெளியான தகவல், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Karur woman who cheated people and married more times

Also Read | 50 வருடம் முன் ராணி எலிசபெத்.. "தேவதைகள் தாலாட்டு பாடட்டும்".. அடக்கத்திற்கு பின் அரச குடும்பம் பகிர்ந்த அரிய புகைப்படம்.!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதி விநாயகர் கோவில் சந்தில் வசித்து வந்தவர் சவுமியா என்ற சபரி. இதற்கிடையே ஆடம்பர வாழ்க்கை வாழ விருப்பம் கொண்டிருந்த சவுமியா, அதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் அவரின் பெற்றோர்களுக்கு பிடிக்காமல் போனதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பெற்றோரை பிரிந்த அவர், ராமநாதபுரத்தில் ஒரு விடுதியில் தங்கி வந்துள்ளார். அப்போது போலீஸ்காரர் ஒருவருடன் சவுமியாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

Karur woman who cheated people and married more times

தொடர்ந்து மோசடி வேலையில் இறங்க முடிவு செய்துள்ளார் சவுமியா. அதன்படி, தனது கணவர் பெயரை வைத்து அவருக்கு மேலிடத்தில் நல்ல பழக்கம் இருப்பதாக கூறி, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பலரையும் ஏமாற்ற ஆரம்பித்துள்ளார் சவுமியா. பலரிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்த சவுமியா, தனது கணவரை பிரிந்து வந்துள்ளார். இதற்கு மத்தியில், மோசடி புகாரில் ராமநாதபுரம் போலீசார் அவரை கைது செய்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்துள்ளார் சவுமியா.

இதன் பின்னர், இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்த சவுமியா, அவருடன் சில மாதம் குடும்பம் நடத்தி விட்டு பிரிந்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கரூர் மாவட்டம் வந்த சவுமியா, தான் வங்கியில் உதவி மேலாளராக இருப்பதாக பலரிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், அமைச்சர் ஒருவர் தனது நெருங்கிய உறவினர் என்றும் பலரை நம்ப வைத்துள்ளார். தொடர்ந்து, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 20 லட்சம் வரை பண மோசடி செய்துள்ளார் சவுமியா.

இதனிடையே, வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் சம்மந்தப்பட்ட நபர்களை அவர் மிரட்டி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Karur woman who cheated people and married more times

இதற்கடுத்து, பல பேரை திருமணம் செய்து கொண்ட சவுமியா, அடுத்ததாக ஒருவரையும் திருமணம் செய்ய திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. திருமண ஏற்பாடுகளும் நடைபெற இருந்த சமயத்தில் தான் சவுமியா குறித்த தகவல், மாப்பிள்ளையின் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது. பண மோசடி செய்ததால், பகல் நேரத்தில் அதிகம் நேரம் வீட்டில் இருக்காத சவுமியா, சமீபத்தில் வீட்டில் இருக்கும் தகவல் பணம் கொடுத்து ஏமாந்த நபர்களுக்கு கிடைத்துள்ளது.

இதன் பின்னர், சவுமியா வீட்டிற்கு வந்த நபர்கள் அவரை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவரிடம் விசாரித்த போது, ஐந்து பேரை திருமணம் செய்து கொண்டதும், பண மோசடி செய்ததும் உறுதியானது.

இன்னும் வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டு சவுமியா ஏமாற்றி உள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read | இரவு 12 மணி.. வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய தோழிகள்.. படுவேகத்தில் வந்த கார்.. அடுத்தடுத்து நடந்த துயர சம்பவம்!!

Tags : #KARUR #KARUR WOMAN #PEOPLE #MARRIED #MARRIED MORE TIMES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Karur woman who cheated people and married more times | Tamil Nadu News.