இரட்டையர்களை திருமணம் செய்த இரட்டை சகோதரிகள்.. "அவங்களுக்கு பொறந்த குழந்தைங்க நடுவுல இப்டி ஒரு விஷயம் இருக்கா??"
முகப்பு > செய்திகள் > உலகம்அவ்வப்போது, இணையத்தில் மிகவும் வியக்கத்தக்க வகையிலான செய்திகள் அல்லது நிகழ்வுகள் வெளியாகி, பலரையும் ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் உறைய வைக்கும்.
அந்த வகையில், US நாட்டைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் தொடர்பான செய்தி, தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
US பகுதியை அடுத்த வர்ஜீனியாவை சேர்ந்தவர்கள் Briana மற்றும் Brittnay Deane. இரட்டை சகோதரிகளான பிரியானா மற்றும் பிரிட்னே ஆகியோர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அதிகம் வைரலாகி இருந்தார்கள். இதற்கு காரணம், சிறு வயதில் இருந்தே ஒன்றாகவே இருக்கும் இரட்டை சகோதரிகளான அவர்கள் இருவரும், இரட்டை சகோதரர்களை திருமணம் செய்ய வேண்டும் என எடுத்த முடிவு தான்.
அதன்படி, கடந்த 2020 ஆம் ஆண்டு, ஜோஷ் மற்றும் ஜெரேமி ஆகிய இரட்டையர்களை அவர்கள் திருமணம் செய்த பிறகு, இவர்களுக்கு பிறந்துள்ள குழந்தை தொடர்பான செய்தி தான், பலரை வியப்பிலும், அதே வேளையில் மற்ற சிலரை குழப்பத்திலும் ஆழ்த்தி உள்ளது.
பொதுவாக, ஒரே தாயின் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளை தான், உடன் பிறந்தவர்கள் என கூறுவார்கள். ஆனால், அடுத்தடுத்து கர்ப்பம் தரித்த பிரியானா மற்றும் பிரிட்னே ஆகியோர், மூன்று மாத இடைவெளியில் குழந்தைகளை பெற்றெடுத்தனர். இதில், பிரியானா - ஜெரேமி தம்பதியரின் குழந்தையான ஜாக்ஸ், கடந்த ஜனவரி மாதம் ஒரு வயது பிறந்தநாளை கொண்டாடி இருந்த நிலையில், பிரிட்னே - ஜோஷ் தம்பதியரின் குழந்தையான ஜெட், கடந்த ஏப்ரல் மாதம் ஒரு வயதை பூர்த்தி செய்திருந்தது.
வேறு வேறு தாயின் வயிற்றில் பிறந்ததால், உறவு முறையில் தான் சகோதரர்கள் என குழந்தைகளான ஜாக்ஸ் மற்றும் ஜெட் அறியப்பட்டாலும், அவர்கள் மரபியல் ரீதியாக உடன்பிறந்த சகோதரர்கள் தான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த அரிய நிகழ்வின் பெயர், "Quaternary Twins" ஆகும்.
அதாவது, இரட்டை சகோதரிகள், இரட்டை சகோதரர்களை மணந்து, அவர்கள் இருவருக்கும் 9 மாத இடைவெளிக்குள் அடுத்தடுத்து குழந்தை பிறந்தால், அவர்கள் "Quaternary Twins" என அழைக்கப்படுவார்கள். இதற்கு காரணம், இரட்டையர்களாக பெற்றோர்களிடம் இருந்து வரும் DNA என்பது இரண்டு குழந்தைகளுக்கும் பொதுவாக இருக்கும் என்பது தான்.
இதனால், அவர்களின் குழந்தைகள் மூன்று மாத இடைவெளியில் பிறந்ததால், உடன்பிறந்த சகோதரர்களாக தான் அறியப்படுவார்கள். தற்போது வரை, உலகில் சுமார் 300 Quaternary குடும்பங்கள் தான் இருக்கின்றனர். இரட்டையர் தம்பதிகள் ஒரே வீட்டில் தங்களின் குழந்தையுடன் வாழ்ந்து வரும் நிலையில், இரண்டு குழந்தைகளை அவர்கள் அனைவரும் தங்களின் குழந்தைகள் போல தான் பார்த்துக் கொள்கிறார்கள்.