"தீபாவளி ஸ்பெஷலா".. ஊழியர்களுக்கு இப்டி ஒரு பரிசா??.. வியந்து பார்க்க வைத்த சென்னை தொழிலதிபர்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Oct 17, 2022 07:05 PM

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சென்னையை சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளர் தனது தொழிலாளர்களுக்கு கொடுத்த பரிசு, பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

chennai jewellery shop owner gifts cars and bikes to his employees

Also Read | "விராட் கோலி தான் ஃபேவரைட்".. படிக்கிறது 6 ஆம் வகுப்பு.. ஆனா ஆடிக்குற ஷாட் எல்லாம் 'தரம்' 🔥.. வைரலாகும் லடாக் சிறுமி!!

நாடு முழுவதும் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு, நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் மிகவும் அசத்தலாக தயாராகியும் வருகின்றனர். புத்தாடைகள் வாங்குவது தொடங்கி, வீட்டில் பலகாரங்கள் தயார் செய்வது, பட்டாசுகள் வாங்கி கொண்டாடுவது என தீபாவளி நாள் என்பது மிகவும் வண்ண மயமான ஒன்றாகவும் இருக்கும்.

அதே போல, தீபாவளி பண்டிகையின் போது பல நிறுவனங்களில் தங்களின் ஊழியர்களுக்கு  போனஸ் கொடுப்பதும் கடைபிடிக்கப்பட்டு வரும் பழக்கமாகும். அந்த வகையில் பிரபல தொழிலதிபர் ஒருவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களை கொடுத்து தனது ஊழியர்கள் அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

chennai jewellery shop owner gifts cars and bikes to his employees

சென்னையில் இயங்கி வரும் பிரபல நகைக் கடையின் உரிமையாளர் ஜெயந்தி லால். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக்கினை பரிசாக வழங்கி உள்ளார். இதில், 10 பேருக்கு காரும், 20 பேருக்கு பைக்குகளையும் ஜெயந்தி லால் வழங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

chennai jewellery shop owner gifts cars and bikes to his employees

இது பற்றி பேசும் ஜெயந்தி லால், தனது ஏற்ற, இறக்க நேரங்களில் தன்னுடன் பயணித்த ஊழியர்களை தனது குடும்பமாக கருதுவதாகவும் இதனால் அவர்களுக்கு பரிசு வழங்கி மகிழ்விக்க நினைத்தேன் என்றும் கூறி உள்ளார்.

chennai jewellery shop owner gifts cars and bikes to his employees

ஊழியர்களுக்கு பரிசு வழங்கிய பிறகு, முழு மனதுடன் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஒவ்வொரு உரிமையாளரும் தங்களின் ஊழியர்களுக்கு பரிசு வழங்கி அவர்களை மதிக்க வேண்டும் என்றும் ஜெயந்தி லால் குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக் கொடுத்துள்ள நகைக்கடை உரிமையாளர் தொடர்பான செய்தி, பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

Also Read | "யப்பா சாமி".. விராட் கோலி எடுத்த மிரட்டல் 'கேட்ச்'.. போட்டியையே மாத்துன அந்த ஒரு தருணம்!!.. 'Goosebumps' வீடியோ!!

Tags : #CHENNAI #JEWELLERY SHOP OWNER #CHENNAI JEWELLERY SHOP OWNER GIFTS CARS AND BIKES #EMPLOYEES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai jewellery shop owner gifts cars and bikes to his employees | Tamil Nadu News.