"சேர்த்து வைங்க"... கணவரை தேடி வந்து கண்ணீர் சிந்திய முன்னாள் காதலி.. முன்னின்று கல்யாணமே பண்ணி வைத்த மனைவி.!
முகப்பு > செய்திகள் > இந்தியாமுதல் மனைவி முன்னிலையில், கணவருக்கு இரண்டாவது திருமணம் நடந்தது தொடர்பான புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | ஒரே ஒரு விஷயத்தில்.. ராணி எலிசபெத்தை OverTake செய்த இளவரசி டயானா.. இணையத்தில் வைரலாகும் தகவல்!!
திருப்பதி மாவட்டம், டக்கிலி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கல்யாண். சமூக வலைத்தளத்தில் அதிகம் பிரபலமான இவர், அடிக்கடி வீடியோ எடுத்து பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அப்படி இருக்கையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் எடுப்பது மூலம் விமலா என்ற பெண்ணுடன் கல்யாணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்த பழக்கம், காதலாக மாறி உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கணவன் மனைவியான கல்யாண் மற்றும் விமலா ஆகியோர் இணைந்து வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் இவர்களை ஏராளமானோர் பின் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.
அப்படி இருக்கையில், விமலாவுக்கு முன்பு சமூக வளைத்ததில் பிரபலமாக இருக்கும் விசாகபட்டினத்தை சேர்ந்த நித்யஸ்ரீ என்ற பெண்ணை கல்யாண் காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. மேலும், அவர்களுக்கு இடையே உருவான பிரச்சனை காரணமாக அவர்கள் பிரிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர், நித்யஸ்ரீயை பிரிந்த கல்யாண், விமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அவர்கள் சிறப்பாக வாழ்ந்து வந்த நிலையில், மீண்டும் நித்யஸ்ரீ கல்யாண் வாழ்க்கையில் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விமலாவை சந்தித்து நித்யஸ்ரீ பேசியதாக கூறப்படும் நிலையில், தங்களை ஒன்று சேர்த்து வைக்குமாறு கண்ணீருடன் அவர் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
தொடர்ந்து, நித்யஸ்ரீ கெஞ்சிக் கொண்டே இருந்ததால், யாரும் செய்ய துணியாத ஒரு காரியத்தை கல்யாணின் மனைவி விமலா செய்ய துணிந்ததாக சொல்லப்படுகிறது. கணவருக்கு அவரின் முன்னாள் காதலியுடன் திருமணம் செய்து வைக்க விமலா முடிவு செய்துள்ளார். விமலா முன்னிலையில், கல்யாண் மற்றும் நித்யஸ்ரீ ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், மூன்று பேரும் இணைந்து வாழவும் திருமணத்திற்கு முன்பு முடிவு செய்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. முதல் மனைவியே முன்னின்று தனது கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தது தொடர்பான செய்தி, இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

மற்ற செய்திகள்
