'தமிழக தேர்தல் 2021'... 'வெற்றி கணக்கை ஆரம்பிக்கிறதா மக்கள் நீதி மையம்'... கமல் முன்னிலை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | May 02, 2021 09:56 AM

தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.

Tamil Nadu Election Result 202, Kamal Haasan Lead

அடுத்த முதல்வர் யார் என்பதைத் தீர்மானிக்கும் தமிழக தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 93 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 68 இடங்களிலும், அமமுக கூட்டணி ஒரு இடத்திலும், மநீம கூட்டணி ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த தேர்தலில் முதல் முறையாகக் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலை வகித்து வருகிறார். கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகித்து வருகிறார். போடிநாயக்கனூர் தொகுதியில் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து வருகிறார். எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்து வருகிறார். மதுரை மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜூ பின்னடைவைச் சந்தித்துள்ளார். விழுப்புரத்தில் சிவிசண்முகம் பின்னடைவைச் சந்தித்துள்ளார். தாராபுரத்தில் எல்.முருகன் முன்னிலை வகித்து வருகிறார்.

Tags : #KAMALHAASAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamil Nadu Election Result 202, Kamal Haasan Lead | Tamil Nadu News.