VIDEO: 'எம்.ஜி.ஆர் தான் என்னை கையில் எடுத்தார்' 'எங்கள் அரசியல் வழிகாட்டும் அரசியல்...' - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சிறப்பு நேர்காணல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் Behindwoods Air-க்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.
![People\'s Justice Center leader kamal Hassan Interview People\'s Justice Center leader kamal Hassan Interview](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/peoples-justice-center-leader-kamal-hassan-interview.jpg)
நேர்காணலின் போது, எம்,ஜி.ஆரின் நீட்சி என்று வெளிப்படுத்துவது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், எம்.ஜி ஆர் தான் என்னை முதலில் கையிலெடுத்தார், நான் அவரை முன் வைத்து பேசுகிறேன் அதை தவிர அவர் செய்தவற்றை எல்லாம் செய்வேன் என்றில்லை, அவரின் ஏழ்மை இல்லாமல் செய்வது, கல்வி வாய்ப்பு அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும்.
மனுஸ்ம்ருதி குறித்த கேள்விக்கு, நான் புத்தகத்தை தான் இல்லையென்று சொன்னேன்,திருக்குறள் மாரி நம் அதை படிக்க வேண்டியதில்லை. சாதி இல்லை என்று நான் கூறினால், நான் என் தலையை மண்ணில் புதைத்துள்ளேன் என்று அர்த்தம், அதை நாம் எப்படி களைய வேண்டும் என்று தான் சொல்கிறேன்.
சூரப்பாவின் விசாரணை குறித்த கேள்விக்கு, சூரப்பாவின் விசாரணைக்கு எந்த குறுக்கீடும் செய்யவில்லை எனவும், அவர்கள் உண்மையை மறைக்கவும், அவரை அவமானப்படுத்தவும் தான் இப்படி செய்ததாக தெரிவித்தார்.
மேலும், எந்த சித்தாந்தமும் எதிரி இல்லை, சித்தாந்தத்தின் பெயரில் மக்களுக்கு தேவையான நன்மையை செய்ய தயங்கமாட்டேன். எங்களுடைய மய்யம் எல்லாவற்றிலுமிருந்து நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில், மக்கள் எங்களுக்கு அதிக அளவில் தங்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர் எனவும், இந்த முறை எங்களுக்கு கிடைத்த நேரத்தை நன்றாக பயன்படுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் ஓட்டுகளை தங்கள் கடமையென நினைத்து போட வேண்டும். அதில் எங்கள் அரசியலை அடிக்கோடிட்டு சொல்கிறேன். இது பழி போடும் அரசியலோ, பழி வாங்கும் அரசியலோ இல்லை. இது வழி காட்டும் அரசியலாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம். இந்த அரசியல் நீங்கள் வழிகாட்டினால் தான் நடத்த இயலும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
(முழு வீடியோவை காண இணைப்பில் இருக்கும் லிங்கை க்ளிக் செய்யவும்)
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)