'நாடு பிடிக்க நடிக்கிறார்கள்...' 'முன்னது வெறி...' பின்னது வீரம், நீங்கள் யார் பக்கம்? - கமல்ஹாசன் கேள்வி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே துவகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் அதிமுக பாஜக ஒரு அணியாகவும், திமுக காங்கிரஸ் ஒரு அணியாகவும், சீமான், கமல்ஹாசன் ஆகியோர் தனித்தனியாகவும் என நான்கு அணிகள் தேர்தலில் பிரதானமாக போட்டிடுகின்றன.
இந்த தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் எடப்பாடியார் மற்றும் முக ஸ்டாலின் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இதற்கிடைய சீமானும், கமல்ஹாசனும் இருகட்சிகளையும் விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எதைச் செய்தாவது ஜெயிக்க வேண்டுமென நினைப்பவர்கள் நாடு பிடிக்க நடிக்கிறார்கள். எதையாவது செய்ய ஜெயித்தாக வேண்டுமெனத் துடிப்பவர்கள் நாடு காக்கத் துணிகிறார்கள். முன்னது வெறி. பின்னது வீரம். நீங்கள் யார் பக்கம்?' எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
