'என் ரஜினி நலமுடன் இருக்கணும், ஆனால்'.... 'ரஜினி எடுத்துள்ள முடிவு'... கமல்ஹாசன் பரபரப்பு கருத்து!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என எடுத்துள்ள முடிவு குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் வரும் டிசம்பர் 31ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, தான் அரசியலுக்கு வரமுடியவில்லை என ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இந்தச்சூழ்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், “ ரஜினியின் ஆரோக்கியம் தான் எனக்கு முக்கியம். ஆனாலும் அவரது முடிவு சற்று ஏமாற்றம் அளித்தாலும் அவரது ஆரோக்கியத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். சென்னை வந்தவுடன் அவரை சந்திப்பேன். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்த அவர், “ காமராஜருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அனைவருமே சினிமாகாரர்கள்தான். மக்கள் அளித்த வரவேற்பைப் பார்க்கும் போது தமிழகத்திற்கு மாற்றம் நெருங்கிவிட்டது என்பதை உணர்த்துகிறது'' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
