'ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்’... ‘அரசியலில் கூட்டணி வைத்தாலும்’... ‘நாம் தமிழர் சீமான் அதிரடி பதில்’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி குறித்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ‘யார் யாருடன் வேண்டுமானாலும் கை கோர்க்கலாம். நான் மக்களுடன் கை கோர்க்கிறேன். நாங்கள் தனித்தே போட்டியிடுவோம். யார் யாருடன் கூட்டணி வைக்கிறார்கள் என்பது குறித்து எங்களுக்கு பிரச்சனை இல்லை. ரஜினி, கமல் இணைந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படாது.
இருவரும் நண்பர்கள். படத்தில் இரண்டு பேரும் இணைந்து நடித்துக் கொண்டிருந்தனர். அதேபோல் இது அரசியல் படம். இதில் வாய்ப்பில்லை. எங்கள் கொள்கை, பாதை, பயணம் தனித்தது. எந்த கட்சியுடனும் எந்த குழப்பமும் கிடையாது. கூட்டணி கிடையாது. அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கி வேலை செய்ய போகிறோம்.
கமல்ஹாசன், ரஜினி கூட்டணி அமைப்பது அவர்களது விருப்பம். நாங்கள் காமராஜர், உள்ளிட்ட தலைவர்களை முன்னிறுத்தி மக்கள் பணி செய்துவருகிறோம்’ எனக் கூறினார்.

மற்ற செய்திகள்
