'அடப்பாவிங்களா... அவுட் இல்லயா'?.. ரன் அவுட் ஆகியும் நாட் அவுட்டான டு ப்ளசிஸ்!.. மேட்ச்சின் நடுவே நடந்த ட்விஸ்ட்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | May 02, 2021 12:32 AM

சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிஎஸ்கே வீரர் டு ப்ளசிஸ் ரன் அவுட்டாகியும் அவுட்டாகாத விதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

ipl csk faf du plessis run not out de kock vs mumbai indians

2021 ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.

இந்த இரண்டு அணிகளுமே ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த சாம்பியன் அணிகளாக விளங்குவதால் இப்போட்டியானது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை அடித்து குவித்தது. இதனை தொடர்ந்து தற்போது 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாட தயாராகி வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டு ப்ளசிஸ் 27 ரன்கள் அடித்திருந்த போது மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பரான குயின்டன் டீ காக் அவரின் ரன் அவட்டை தவறவிட்டார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பௌலர் ஜேம்ஸ் நீஷம் வீசிய 10வது ஓவரின் மூன்றாவது பந்தை மிக் விக்கெட் திசைக்கு அடித்துவிட்டு இரண்டு ரன் ஒட முயற்சித்தார் டு ப்ளசிஸ்.

ஆனால், அவர் கிரீசிற்கு வருவதற்கு முன்பே பந்து டீ காக்கிடம் வந்துவிட்டது. ஆனால், அவர் பந்தை பிடித்து அடிப்பதற்கு முன்பே, ஸ்டம்பில் இருந்த பைல்ஸை தவறுதலாக தட்டிவிட்டிருந்தார். இதனை ரீப்ளே செய்து பார்க்கும் போது நன்றாக தெரிந்தது. எனவே டுயூப்ளசிஸ் கிரீசிற்குள் வராமல் இருந்திருந்தாலும் அவருக்கு மூன்றாவது நடுவர் நாட் அவுட் வழங்கினார்.

மேலும், பந்து கைக்கு வரும் முன் பைல்ஸ் கீழே விழுந்தால் பந்தை பிடித்ததும் ஸ்டம்பை கையில் எடுக்க வேண்டும். ஆனால் அதற்குள் டூபிளெஸ்ஸிஸ் கிரீசுக்குள் வந்ததால் அந்த விதிமுறையின் படி ரன் அவுட்டில் இருந்து தப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்ட டு ப்ளசிஸ் அற்புதுமாக ஆடி அரைசதம் அடித்தார். 28 பந்துகளை எதிர்கொண்ட டு ப்ளசிஸ் 50 ரன்கள் அடித்து பொல்லார்ட் வீசிய பந்தில் அவுட்டானார். இதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடக்கம்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ipl csk faf du plessis run not out de kock vs mumbai indians | Sports News.