'நெருங்கும் சட்டமன்ற தேர்தல்'...'நடிகர் ரஜினியுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு'... விரிவான தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் ரஜினிகாந்த்தை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நடிகர் சந்தித்துப் பேசினார். சட்டமன்ற தேர்தலில் நண்பர் ரஜினியைச் சந்தித்து ஆதரவு கேட்பேன் எனக் கமல் கூறி வந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தாக கூறப்படுகிறது. சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் ரஜினிகாந்த்துடன் அரசியல் குறித்து கமல்ஹாசன் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சட்டப் பேரவைத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த்தின் ஆதரவைப் பெறும் வகையில் கமல்ஹாசன் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பின்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ரஜினிகாந்த்தின் உடல் நிலை குறித்து கமல்ஹாசன் நலம் விசாரித்தார்.

மற்ற செய்திகள்
