'தமிழகத்தின் லஞ்சப் பட்டியல் 'இது' தான்!'.. ஆதாரத்தை வெளியிட்டு... கமல்ஹாசன் அதிரடி!.. அனல் பறக்கும் தேர்தல் களம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்கள் நீதி மய்யம் கட்சியும் திராவிட கட்சி தான் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் பேசும் அனைவரும் திராவிடர்கள் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திருச்சியில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றுள்ளார். இந்தநிலையில் அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"எங்கள் ஆட்சியின்போது அனைவரின் வீட்டிலும் இணைய வசதியுடன் கணினி இருக்கும். அதற்கான முதலீட்டை அரசு கொடுக்கும். இணைய வசதி இருப்பதால் அரசுக்கும், மக்களுக்கும் தொடர்பு இருந்துக்கொண்டே இருக்கும். நேர்மை தான் மக்கள் நீதி மையத்தின் சாதனை.
தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை தனித்தனியாக லஞ்சம் பெறுவது தொடர்கிறது. இது லஞ்சப்பட்டியல் தான். அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். எந்ததெந்த வேலைகளுக்கு எவ்வளவு லஞ்சம் பெறப்படுகிறது என்ற பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். அரசு மருத்தவமனையில் பெண் குழந்தைகளுக்கு ரூ.300, ஆண் குழந்தைகளுக்கு ரூ.500 லஞ்சம் பெறப்படுகிறது.
நாங்கள் 3வது அணியாக உருவாகிவிட்டோம். எங்கள் தலைமையில் 3வது அணி இருக்கும் என தான் கருதுகிறோம். கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு செய்யப்படும்.
ரஜினியின் உடல்நிலையும் ஆரோக்கியமும் தான் முக்கியம். உடல்நிலை சரியான பிறகு கட்சி துவங்கும் பணியை தொடங்குவார்.
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்பது மக்கள் நீதி மையத்தின் தேர்தல் வாக்குறுதி. மக்கள் நீதி மய்யமும் திராவிட கட்சி தான். தமிழ் பேசும் அனைவரும் திராவிடர்கள் தான். விவசாயத்தை மதிக்காத நாடு வீழ்ச்சியடையும். அது நமது நாட்டிற்கு நடக்க கூடாது" என்று அவர் கூறினார்.
பிறப்பு முதல் இறப்பு வரையிலான சான்றிதழ்களுக்கும், சேவைகளுக்கும் தமிழகம் முழுக்க நடைமுறையில் இருக்கும் லஞ்சப் பட்டியல் இது. மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா? மறக்க முடியுமா? #நான்_கேட்பேன் pic.twitter.com/hJLpQ1XG9s
— Kamal Haasan (@ikamalhaasan) December 28, 2020

மற்ற செய்திகள்
