‘ரஜினி கேட்டுக்கொண்டால்’... ‘நான் ஏற்க தயார்’... ‘கமல்ஹாசன் அதிரடி பதில்’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டால் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவேன் என செய்தியாளர்கள் கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசன், காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தை பார்வையிட்டார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ரஜினியோடு கூட்டணிக்கு தயார் என கூறிய பிறகு பிரச்சார வேலைகளை தொடங்கிவிட்டதால் ரஜினியுடன் பேசவில்லை.
எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி டார்ச் சின்னம் வேண்டாம் என கூறியுள்ள நிலையில் மீண்டும் சின்னத்தை பெற சட்டப் போரட்டம் நடத்துவோம். மக்களை வறுமை கோட்டிற்கு மேல் அல்லாமல், செழுமை கோட்டிற்கு மேல் வைப்பதே தங்கள் நோக்கம்’ என கமல்ஹாசன் தெரிவித்தார்.
பின்னர் ரஜினி கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன். ஆனால் முதல்வர் வேட்பாளராக நிற்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார். முதல்வர் வேட்பாளராக உங்களை நிற்கும்படி ரஜினி கேட்டால் நிற்பீர்களா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ரஜினி கேட்டுக் கொண்டால் மறுப்பதற்கில்லை.
அதனை ஏற்பேன். நாங்கள் எங்களுக்குள் பேசி முடிக்க வேண்டியதை நீங்கள் பேசி முடிவு செய்தால் எப்படி என கூறினார். தான் பகுத்தறிவாளன் எனவும், யாரோடும் உரையாடுவதில் தமக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் தெரிவித்தார்.