'10 நிமிஷம்தான் ஆச்சு..'.. 'எவ்வளவோ கெஞ்சினேன்.. கேக்கல!'.. அரசுப் பேருந்து ஓட்டுநரின் விபரீத முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 19, 2019 02:00 PM

சென்னையில் பணிக்கு பத்து நிமிடங்கள் தாமதமாக வந்த அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு பணி வழங்கப்படாததால், அவ்விடத்திலேயே ஓட்டுநர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil Nadu bus driver pours petrol on self, attempts suicide

தாம்பரம் அரசுப் போக்குவரத்து கழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநராக இருப்பவர் ஹரிமுத்து. இவர் பணிக்கு 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததை அடுத்து, இவருக்கு பணிமனையின் கிளை மேலாளர், பணி வழங்காததாக கூறப்படுகிறது. 

இதனால் மன உளைச்சலில் அந்த இடத்திலேயே தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொள்ள  முயன்றுள்ளார். ஆனால் அருகில் இருந்த ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளனர். 

இதுபற்றி பேசிய ஹரிமுத்து, 10 நிமிடம் தாமதமானதால் தன்னை பேருந்தினை இயக்க வேண்டாம் என்று மேலாளர் கூறியதால், மனமுடைந்து போனதாகவும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் கேட்கவில்லை என்பதால் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Tags : #CHENNAI #DRIVER #BUS #TRANSPORT #TNGOVT