'பாக்ஸிங்' தந்தையால்.. '7 வயது மகளுக்கு'.. நேர்ந்த 'கொடூரம்'.. அதன்பின் கோர்ட் வாசலில் அரங்கேறிய சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Aug 01, 2019 10:11 PM
அர்ஜெண்டினாவின் புகழ்பெற்ற வெல்டர் வெயிட் சாம்பியனான கார்லோஸ் பால்தோமிர், பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அவருக்கு 18 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

48 வயதான பால்தோமிர், கடந்த 2006-ஆம் ஆண்டு, சுமார் 10 மாதங்கள் தொடர்ந்து சாம்பியனாக இருந்துள்ளார். அப்போதைய நியூயார்க் சாம்பியன் ஸாப் ஜூதாவை வீழ்த்தி அவர் இந்த சாம்பியன் பட்டத்தைப் பெற்று மீண்டும் நவம்பர் 2006-ஆம் ஆண்டு தோற்கும் வரை தக்கவைத்தார்.
எனினும் கடந்த 2014-ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற பால்தோமிர், அதன் பின் டிரெய்னராக 2016-ஆம் ஆண்டுவரை இருந்தார். இவருக்கு இரண்டாவது திருமணம் நிகழ்ந்து மனைவியுடன் வாழ்ந்து வந்த சமயத்தில்தான், முதல் மனைவி அளித்த புகார் பரபரப்பை கிளப்பியது. அதன்படி, பால்தோமிர், தனது முதல் மனைவிக்கும் தனக்கும் பிறந்த 7 வயது மகளுக்கு 2012 முதல் 2014-ஆம் ஆண்டுவரை பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த புகாரில் அவரது முதல் மனைவி தெரிவித்ததன் பேரில், கடந்த 2016-ஆம் ஆண்டு பால்தோமிர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு நீதிமன்றம் 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதன்பின், அழைத்துவரப்பட்ட பால்தோமிர் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, அவர்களை நோக்கி, தனது நடுவிரலை ஆபாசமான முறையில் காண்பித்தது சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது.
