‘கிரிக்கெட் கிரவுண்டில் நுழைந்த பாம்பு’!.. மிரண்டுபோன அம்பயர்கள்..! பரபரப்பு வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Dec 10, 2019 01:35 PM

ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்துக்குள் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Snake delays start of Andhra vs Vidarbha Ranji Trophy match

ஆந்திரப் பிரதேசம் மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கிரிக்கெட் போட்டி நேற்று விஜயவாடா மைதானத்தில் நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பு மைதானத்தில் பாம்பு ஒன்று ஊர்வதைக் கண்டு நடுவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே மைதான ஊழியர்கள் பாம்பினை வெளியேற்றும் முயற்சியில் இறங்கினர்.

அப்போது மைதானத்துக்குள் வீரர்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. பாம்பை வெளியேற்றிய பிறகு போட்டி நடைபெற்றது. இதற்கு முன்னர் மைதானத்துக்குள் தேனீக்கள், நாய் உள்ளிட்டவை நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மைதானத்துக்குள் பாம்பு நுழைந்த வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Tags : #BCCI #CRICKET #SNAKE #RANJITROPHY