‘ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் வந்தாரு’.. அதுக்குள்ள மறுபடியும் காயமா?.. கலக்கத்தில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jan 24, 2020 05:29 PM

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியின்போது வேகப்பந்து வீச்சாளர் பும்ராக்கு காலில் காயம் ஏற்பட்டது.

IND vs NZ: Jasprit Bumrah twists ankle injury scare

இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று (24.01.2020) ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூஸிலாந்து வீரர்கள் முதலில் பேட்டிங் செய்தனர். 20 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக முன்ரோ 59 ரன்களும், ராஸ் டெய்லர் 54 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 51 ரன்களும் எடுத்தனர்.இந்திய அணியை பொருத்தவரை பும்ரா, முகமது ஷமி, ஜடேஜா, சஹால், ஷர்துல் தாகூர் மற்றும் சிவம் டுபே தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இந்த நிலையில் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 7 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க, அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி (45) மற்றும் கே.எல்.ராகுல் (56) கூட்டணி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதனை அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் (58) தன் பங்கிற்கு அதிரடி காட்ட 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து இந்தியா அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு பந்துவீசும்போது திடீரென காலில் காயம் ஏற்பட்டு மைதானத்தில் விழுந்தார். உடனே மைதானத்துக்கு வந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். சில நிமிடங்களுக்கு பின் மீண்டும் தனது ஓவரை பும்ரா வீசினார். முன்னதாக உலகக்கோப்பையின் போது ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை முடிந்து சமீபத்தில்தான் பும்ரா அணிக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Tags : #CRICKET #BCCI #BUMRAH #INDVNZ #T20 #INJURY