‘பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு’... ‘இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 21, 2019 09:08 AM

காரைக்கால் பேருந்துநிலையத்தில், பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த பெண்ணை, காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sexual harassment by youngster for widow women in karaikal

கணவனை இழந்த காரைக்காலைச் சேர்ந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர், காய்கறி வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார். ஒரு மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்ட அந்தப் பெண்மணி, மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து, வேளாங்கண்ணி அருகேயுள்ள பரவை காய்கறி சந்தைக்குச் சென்று, காய்கறிகள் வாங்கிவர பேருந்துக்காகக் அதிகாலை காத்திருந்திருக்கிறார்.

அப்போது திடீரென பொலிரோ காரில் வந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க நான்கு இளைஞர்கள், அந்தப் பெண்மணியை, காரில் கடத்திச் சென்றுள்ளனர். பைபாஸ் சாலை அருகே இருட்டு பகுதிக்கு இழுத்துச் சென்ற அவர்கள், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் காய்கறி வாங்க வைத்திருந்த சுமார் 6,000 ரூபாய், செல்போன் மற்றும் அணிந்திருந்த நகைகளையும் அந்தக் கும்பல் பறித்துச் சென்றுவிட்டது.  இதையடுத்து அப்பெண்மணியின் மகன் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து காரைக்கால் சிறப்பு படையைச் சேர்ந்த காவல்துறையினர் கூறுகையில், ’அப்பெண்மணியை உடனடியாகக் காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தோம். அவர் கூறிய வாகன தடயங்கள், இளைஞர்களின் அடையாளங்களை வைத்து நகரில் உள்ள சிசிடிவி் கேமராவை ஆய்வு செய்தோம். அதன்மூலம் கடத்தலுக்குப் பயன்படுத்திய பொலிரோ வாகனத்தைக் கண்டறிந்தோம்.

இதையடுத்து ராஜ்குமார் மகன் சின்னையா, ராமலிங்கம் மகன் விஜய் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளோம். மேலும், ராமு மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். அப்பெண்மணியின் பணம், செல்போன் மற்றும் நகைகளைக் கைப்பற்றியுள்ளோம்' என்றனர்.

Tags : #SEXUALABUSE