‘நான் இருவரில் இவரைத் தான் தேர்ந்தெடுப்பேன்..’ இந்திய அணி குறித்து சச்சின் கருத்து..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 27, 2019 12:23 PM

உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதுகிறது.

I would pick Bhuvaneshwar over Shami says Sachin Tendulkar

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்தார். இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவருக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டார். அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷமி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் விளையாட வேண்டுமென சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், “புவனேஷ்வர் குமார் தற்போது காயத்திலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளார். நான் அவர் பயிற்சியின்போது பந்துவீசுவதைப் பார்த்தேன். அவர் மிகவும் நல்ல உடல்நிலையில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷமிக்குப் பதிலாக அவர் இடம்பெற வேண்டும்.

இடது கை ஆட்டக்காரர்களுக்கு நன்றாக பந்துவீசக்கூடிய புவனேஷ்வர் குமார் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கிறிஸ் கெயிலுக்கு கடும் நெருக்கடியைக் கொடுப்பார். முகமது ஷமியை அணியிலிருந்து நீக்குவது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் அதைத் தவிர வேறு வழியில்லை” எனக் கூறியுள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #TEAMINDIA #INDVSWI