'திடீரென வந்த மெயிலால் குஷியான ஊழியர்களுக்கு'... 'அடுத்ததாக காத்திருந்த பெரிய டிவிஸ்ட்?!!'... 'ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்!!!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்அமெரிக்க இணையதள நிறுவனமான கோடாடி (GoDaddy) அதன் ஊழியர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

டிசம்பரில், கோடாடியின் சுமார் 500 ஊழியர்களுக்கு 650 டாலர் கிறிஸ்துமஸ் போனஸ் வழங்கப்படும் என அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் அவர்களுடைய தனிப்பட்ட விவரங்களுடன் ஒரு படிவத்தை நிரப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து 2 நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கு வந்த வேறு ஒரு மின்னஞ்சலில், எங்களுடைய சமீபத்திய பிஷிங் சோதனையில் நீங்கள் தோல்வியுற்றதால் இந்த மின்னஞ்சலை பெறுகிறீர்கள் என இருந்துள்ளது. இது கோடாடி ஊழியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதை அடுத்து, ஊழியர்களிடம் அந்நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
அதாவது, கிறிஸ்துமஸ் போனஸ் வழங்குவதாக அனுப்பப்பட்ட மின்னஞ்சலை கோடாடி நிறுவனம் கணினி பாதுகாப்பு சோதனைக்காக அனுப்பப்பட்டது என அறிவித்தபின் அதன் ஊழியர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள கோடாடியின் செய்தித்தொடர்பாளர், "எங்கள் நிறுவனம் அதன் தளத்தின் பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. அது சோதனை மெயில் என அறிந்ததால் சில ஊழியர்கள் வருத்தப்பட்டதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்" எனத் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
