'அடுத்த மாதமே மக்கள் பயன்பாட்டுக்கு வரும் தடுப்பூசி???'... '95% பலன் கொடுக்குது!!!'... 'பிரபல நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!'...
முகப்பு > செய்திகள் > உலகம்பிரபல நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி டிசம்பர் மாத மத்தியில் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக நாடுகளை கொரோனா இரண்டாம் அலை மிக மோசமாக தாக்கி வரும் சூழலில், அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் ஒருநாள் பாதிப்பு லட்சத்தை கடந்து சென்று கொண்டுள்ளது. அதேபோல ஐரோப்பிய நாடுகளிலும் இரண்டாம் கட்ட கொரோனா தாக்கம் கடுமையாக உள்ள நிலையில் தடுப்பூசி தொடர்பான செய்திகள் அடுத்தடுத்து வந்து ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஃபைசர் மற்றும் பயான்டெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி 95% திறனுடன், மாடர்னாவின் கொரோனா தடுப்பூசி 94.5% செயல் திறனுடனும், ஸ்புட்னிக் தடுப்பூசி 92% திறனுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்தை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரி அமெரிக்காவில் விண்ணப்பிக்கப்பட உள்ளது. இதற்கிடையே தற்போதைய நிலை தொடர்ந்து நீடித்தால் டிசம்பர் மாதம் மத்தியில் தங்களுடைய கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும் என ஃபைசர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அதேநேரம் ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா போன்ற நாடுகளில் பயன்படுத்துவதில் ஒரு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. இந்த தடுப்பூசியை -70 டிகிரி குளிர் நிலையிலேயே வைத்திருக்க முடியும் என்பதால் அதுபோன்ற கட்டமைப்பு வசதி இல்லாத ஏழை மற்றும் நடுத்தர நாடுகளுக்கு இது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும் அடுத்ததாக வெளியிடப்பட இருக்கும் நம்பிக்கைகுரிய கொரோனா தடுப்பூசிகளை பல கோடி கணக்கில் வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதாக நம்பிக்கை தரும் செய்தி வெளியாகியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
