‘ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுகிறார்’.. ‘பெண் காவலர்’ மீது ட்ராவல்ஸ் உரிமையாளர் பரபரப்பு புகார்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Behindwoods News Bureau | Aug 06, 2019 05:29 PM

கோவையில் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை வைத்து பெண் காவலர் மிரட்டுவதாக ட்ராவல்ஸ் உரிமையாளர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

man files complaint over blackmail by lady police in coimbatore

கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ட்ராவல்ஸ் உரிமையாளரான சதீஸ்குமார் என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தனியே வசித்து வருகிறார். அதேபோல கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த கவிதா என்பவரும் கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சதீஷ்குமார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது நிறுவனத்தில் பணிபுரியும் மைதிலி என்பவர் மூலமாக தனக்கு கவிதா என்ற பெண் அறிமுகமானதாகவும், தன்னுடன் நெருங்கிப் பழகிய கவிதா தற்போது அந்த வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டி தன்னிடம் பணம் பறிப்பதகாவும் சதீஷ்குமார் கூறியுள்ளார். இதில் மைதிலிக்கும் தொடர்பிருப்பதாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாகவே சதீஷ்குமாரும், கவிதாவும் தனிமையில் இருக்கும்  வீடியோ ஒன்று வெளியானதாகவும், அதனால் கவிதா ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஆபாச வீடியோவைக் காட்டி பணம் பறிப்பதாக பெண் காவலர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #COIMBATORE #LADY #POLICE #SEX #VIDEO #BLACKMAIL