அய்யோ சிசிடிவி இருக்கு சிக்கிப்போம்.. புத்திசாலித்தனமா யோசிச்சு ‘சின்ன’ விஷயத்தில் சிக்கிய திருடன்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பேக்கரியில் திருடச் சென்ற திருடன் சிசிடிவி கேமராவையும் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடையின் பின் பக்க ஜன்னல் கண்ணாடியை மர்ம நபர் ஒருவர் செங்கல்லால் உடைத்து அதில் இருந்த கம்பிகளை நீக்கியுள்ளார். பின்னர் மெதுவாக பேக்கரிக்குள் நுழைந்துள்ளார்.
இதனை அடுத்து கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துள்ளார். அப்போது கடைசில் சிசிடிவி கேமராக்கள் இருப்பதை பார்த்த அவர், மாட்டி விடுவோம் என்ற பயத்தில், அந்த கேமராக்களையும், அதன் மானிட்டர்களையும் கழற்றி எடுத்து சென்றுள்ளார்.
ஆனால் காட்சிகளை பதிவு செய்யும் ஹார்ட் டிஸ்க்கை மட்டும் விட்டுவிட்டு சென்றுள்ளார். அதில் அவருடைய முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. அதனைக்கொண்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மண்டையில் இருக்கும் கொண்டையை மறந்ததிட்டனே என வடிவேல் சொல்வது போல, ஹார்ட் டிஸ்க்கை திருடன் மறந்து விட்டுச் சென்றது போலீசாரின் வேலையை சுலபமாக்கி உள்ளது.

மற்ற செய்திகள்
