பாக்க தான் இப்படி.. ஆனா ஆளுங்க அப்படி.. பீதியை கிளப்பும் டவுசர் அணிந்த திருட்டு கேங்.. எச்சரிக்கை மக்களே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரைக்கால் டிரவுசரோடு நள்ளிரவில் வீடுகளை நோட்டமிட்டு வீதியில் கேஷுவலாக செல்லும் டவுசர் கொள்ளையர்களால் மதுரையில் பரபரப்பு.

07 பிப்ரவரி 2022: மதுரை மாவட்டம் பரவை பகுதியில் நள்ளிரவில் வீதிகளை நோட்டமிட்டபடி அரைக்கால் டவுசரோடு வீதிகளில் கேஷுவலாக நடந்து செல்லும் கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டவுசரோடு உலாவரும் மர்மகும்பல்
மதுரை மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதி அருகே இரவில் மேலாடை இல்லாது, வெறும் அரைகால் டவுசரோடு வீதிகளை நோட்டமிடும் கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரவை AIBEA குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் டவுசர் அணிந்த கொள்ளை கும்பல் வீடு வீடாக சென்று நோட்டமிடும் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
சாவகசமாக செல்லும் கொள்ளையர்கள்
மேலும், மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் கொள்ளையர்கள் இவ்வளவு சாவகாசமாக செல்வது குறித்த வீடியோ காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டும் 140 சவரன் கொள்ளை
கடந்த ஆண்டும் இதே குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் வீடு புகுந்து மாமியார், மருமகளை கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 140 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் கொள்ளையடிக்க அரைக்கால் டவுசரோடு மர்ம கும்பல் நோட்டம் விடுவதாக அப்பகுதி மக்கள் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
குடியிருப்பு மக்கள் வேண்டுகோள்
மேலும், இப்பகுதியில் ரோந்து பணியில் கூடுதலாக இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உதவ வேண்டுமென அந்த குடியிருப்பு பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மற்ற செய்திகள்
