'ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்களுக்கு...' - சென்னை உயர்நீதிமன்றம் போட்ட 'புதிய' உத்தரவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை உயர்நீதி மன்றம் தமிழகத்தில் இயங்கும் ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்களில் சிசிடிவி பொருத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு கிரிஜா என்பவர் சென்னையில் இருக்கும் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சட்ட ரீதியான செயல்பாட்டில் காவல்துறை தலையிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் அளித்த புகரில் காவல்துறை அடிக்கடி ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் வந்து தலையிடக்கூடாது என உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தற்போது மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரிக்கும் போது ஸ்பா, மசாஜ் சென்டர் ஆகியவற்றுக்கு எதிராகப் புகார்கள் வரும்போது மட்டுமே ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளனர்.
விசாரணை முடிந்த பின் தமிழகத்தில் ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்களில் சிசிடிவி பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமீப நாட்களாக ஆயுர்வேத சென்டர்களில், ஸ்பாக்களில் சட்ட விரோதமான காரியங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளிவந்தம் உள்ளது. கடந்த வாரத்தில் கண்ணாடிக்கு பின்புறம் ரகசிய அறை அமைத்து சட்ட விரோதமாக செய்த காரியம் மும்பையில் பரபரப்பாக பேசப்பட்டது. இது மும்பை மட்டுமல்லாமல் பல நகரங்களில் யாருக்கும் தெரியாமல் நடைபெற்று வருகிறது. இது தொடர்கதை ஆவதால் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குரல்கொடுத்தனர்.
இந்த நிலையில், நீதிமன்றம், காவல்துறையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிப்பது சட்ட விரோதமானது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவல்துறை நடவடிக்கையை தடுப்பது, குற்றங்கள் அதிகரிக்கக் காரணமாகவும் அமைந்துவிடும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, ஆயுர்வேத சிகிச்சை மற்றும் மசாஜ் மையங்கள் ஆகியவை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வருவதால், காவல்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதால் அதைத் தடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் உள்ளது போலத் தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டுமெனத் தமிழக டிஜிபி-க்கு நீதிபதி சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
